அன்பில் அவன் பட காட்சி 
சினிமா செய்திகள்

திட்டமிட்ட தேதியில் வெளியாகவில்லை ‘அன்பில் அவன்’ - புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

படத்தின் முன்னோட்ட விழாவில் பட நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ படம் முதலில் இந்த மாதம் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பு காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, உலகம் முழுவதும் அக்டோபர் 2, 2026 அன்று பிரம்மாண்டமாக வெளியிடப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அன்பில் அவன்’. படத்தில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் குதித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இப்படத்தை ஹேப்பி ஹைபிக்சர்ஸ் நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற 25-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தது.

இதனால் இப்படத்தின் முன்னோட்ட விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் பட நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

தள்ளிவைப்பு

இந்த நிலையில், திட்டமிட்டப்பட்ட தேதியில் ‘அன்பில் அவன்’ திரைப்படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. ‘அன்பில் அவன்’ படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத்திரைப்படம் மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரம்மாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய இந்த ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே.

இந்தப் பயணத்திற்காக நாங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் தொடர்ந்த அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களை சந்திப்போம் என உறுதியளிக்கிறோம். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி என படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT