சினிமா செய்திகள்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அன்பே டயானா': எந்த சேனல், எப்போது பார்க்கலாம்?

இப்படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி மற்றும் நடித்த படம் 'அன்பே டயானா'. கடந்த ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், சென்னை பெரம்பூரில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலிக்கும் நாயகனின் கதையை மையமாகக் கொண்டு நகரும் இப்படம், காதல் மற்றும் குடும்பம் சார்ந்த நகைச்சுவைக் கதையாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரம்

திரைப்படம் மற்றும் ஓடிடியில் வெளியான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இப்படம் முதன்முறையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அன்பே டயானா திரைப்படம் சோனி விழா தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT