சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது கமல்ஹாசனின் புதிய பட அப்டேட்!

நாளை மறுநாள் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இணையும் புதிய திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டர்மெரிக் சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு சாப் அபியங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் பிறந்தநாளான நாளை மறுநாள் (நவ.7) படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

SCROLL FOR NEXT