ajith Campa Energy Drink ad 
சினிமா செய்திகள்

இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான அஜித்தின் 'Campa Energy Drink' விளம்பர வீடியோ!

அஜித் நடித்துள்ள கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரம் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த கார் ரேஸிங் அணியான, அஜித்குமார் ரேஸிங்' மூலம் பல்வேறு பந்தயப் போட்டிகளில் கலந்துவருகிறார் அஜித்குமார். அஜித்தின் இந்த கார் ரேஸ் வாழ்க்கைத் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.

இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (Campa Energy), அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் விளம்பர உலகில் கால் பதித்தார்.

இந்நிலையில், அஜித் நடித்துள்ள கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரம் வெளியாகியுள்ளது. ரேஸிங் பின்னணியை கொண்டு உருவாகியுள்ள அந்த விளம்பரம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அஜித் ரசிகர்களே இந்த விளம்பரத்தை கிண்டலடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.