சினிமா செய்திகள்

Ajith Kumar | பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசிய கொடி... சவாலான பந்தயத்தில் சம்பவம் செய்த அஜித் குமார்

இந்திய தேசிய கொடியை ஏந்திய படி அஜித் குமார் வெற்றிக் கோப்பையை உயர்த்தி காண்பித்தார்.

நடிப்பு தவிர்த்து கார் ரேசிங் மற்றும் சாகச பயணம் செய்வதில் அஜித் குமார் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வரிசையில், அதிக சவாலான கார் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேசிங் அணி இரண்டாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி உலகின் மிகவும் சவாலான பந்தயங்களில் ஒன்றான 24H Series GT3 Pro -AM கார் பந்தயத்தில் இரண்டாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்ற நிலையில், இந்திய தேசிய கொடியை ஏந்திய படி அஜித் குமார் வெற்றிக் கோப்பையை உயர்த்தி காண்பித்தார்.

இது தொடர்பாக அஜித் குமார் ரேசிங் அணியின் எக்ஸ் தளப் பக்கத்தில், "கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை சுமந்து சென்ற பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

புகழ்பெற்ற Spa-Francorchamps பந்தய களத்தில் 24 மணி நேர தொடர் GT 3 ப்ரோ பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2-ஆம் இடம்பிடித்துள்ளது. இந்த வெற்றி ஆர்வம், மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எல்லை இல்லை என்பதை நிரூபித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது," என குறிப்பிடப்பட்டுள்ளது.