சினிமா செய்திகள்

தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் அஜித் குமார் - வைரலாகும் புகைப்படம்

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

மாலை மலர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஐதராபாத் நகரில் படப்பிடிப்புக்கு இடையே, நடிகர் அஜித் குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார்.

ஐதராபாத் நகரில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.