சினிமா செய்திகள்

முதல்வர் விஜய் என் அழைப்பை ஏற்று வந்ததில் மகிழ்ச்சி - அஜித் குமார்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அஜித் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் பிரிட்டன் கார் பந்தயத்திற்கு வரவிருப்பது பற்றி அஜித் குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரிட்டனில் நடைபெற இருக்கும் லீ மேன்ஸ் கப் தொடரில் நடிகரும் ரேசருமான அஜித் குமாரின் அணி பங்கேற்கிறது. இன்று நடைபெறம் இந்த கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் அங்கு செல்வதாக கூறப்பட்டது.

மேலும், தமிழ் நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக கார் பந்தய தளங்களை பார்வையிடும் நோக்கில் முதல்வர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அஜித் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் பேச்சு:

இதுகுறித்து பேசிய அஜித் குமார், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்வர் ஆனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்றவை இந்தியாவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்," எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT