Courtesy: SunNews/X
சினிமா செய்திகள்

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் அஜித் குமார், எம்.எஸ். தோனி - வைரலாகும் புகைப்படங்கள்

அனிருத் - காவ்யா திருமண கொண்டாட்டங்கள் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தன.

சென்னையில் இன்று (நவ. 22) நடைபெற்ற, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொள்வதை காட்டுகின்றன. இருவரும் பேசிக்கொண்டும், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர்.

அஜித், நேர்த்தியான வெள்ளைச் சட்டையுடன் கூடிய ஒரு கிளாசிக் கருப்பு நிற சூட் அணிந்திருந்தார். இதற்கிடையில், ரஜினிகாந்த் கருப்பு நிற சட்டையில் வந்தார்.

திருமண கொண்டாட்டங்கள் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தன. இவ்விழாவில் நடிகர் சிலம்பரசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, நியூசிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் பல திரைப்பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT