ஆஸ்கார் அகாடமி 2028 ஆம் ஆண்டில் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்டண்ட் கலையை அங்கீகரித்து அதற்கு அதிகாரப்பூர்வ விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆஸ்கர் குழு, ஸ்டண்ட் வடிவமைப்பு எப்போதும் திரைப்படங்களின் மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
இப்போது, அவை ஆஸ்கார் விருதுகளின் ஒரு பகுதியாகும். 2028 ஆம் ஆண்டில் 100வது ஆஸ்கார் விருதுகளுடன் இந்த பிரிவு தொடங்கப்படும். அதில், 2027 இல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் வடிவமைப்புகுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆஸ்கார் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யங் ஆகியோர் கூட்டாகக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சிறந்த பணிகளைப் போற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அடைவதில் அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த RRR படமும் இடம்பெற்றுள்ளது.
இதை முன்னிட்டு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 'இறுதியாக!' 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன்.
இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'RRR' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.
At last!!After a 100 year wait !!! Ecstatic for the new Oscars stunt design category for the films releasing in 2027! Huge thanks to David Leitch, Chris O'Hara, and the stunt community for making this historic recognition possible, and to @TheAcademy, CEO Bill Kramer, and… https://t.co/QWrUjuYU2I