சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரப்பி மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு முன்னணி இந்திய நடிகை தமன்னா. திரையுலகில் கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்துள்ள இவர், ரசிகர்களால் அன்போடு 'மில்க் பியூட்டி' என்று அழைக்கப்படுகிறார். கலைத்துறைக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘புருஷன்’ படத்திலும், சில இந்தித் திரைப்படங்களிலும் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பது தான் என் மிகப்பெரிய பொறுப்பு.
அதனால் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை பாராட்டுங்கள். தேவையில்லாமல் விமர்சனம் செய்யாதீர்கள். சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரப்பி மகிழ்ச்சி அடைய வேண்டாம். இதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக வைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.