சினிமா செய்திகள்

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் மிகவும் முக்கியமானது - நடிகை ஷெர்ரி அகர்வால் மகிழ்ச்சி!

இசை, காதல் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் ஒரு மியூசிக்கல் காதல் திரைப்படமாக ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது.

மறக்க முடியாத அனுபவம் - நடிகை ஷெர்ரி அகர்வால்

ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத பல இனிமையான நினைவுகளைக் கொடுத்துள்ளது. படப்பிடிப்பு தளம் முழுவதும் நேர்மறையான ஆற்றலுடன் இருந்தது.

தமிழ் திரையுலகில் நான் அறிமுகமாகும் இத்திரைப்படம், எனது ஒட்டுமொத்த திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும்.

பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி, ஒளிப்பதிவாளர் சாலமன், ஹேமந்த் செல்வராஜ் மற்றும் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இப்படம் நிச்சயம் அனைத்து தலைமுறை ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

ஷெர்ரி அகர்வாலின் திரைப்பின்னணி

நடிகை ஷெர்ரி அகர்வால் ஏற்கனவே தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, கன்னடத்தில் ‘ஆகர்ஷிதா’, இந்தியில் ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ மற்றும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

டி-சீரிஸ், ஜீ மியூசிக் நிறுவனங்களின் பல பிரபல இசை ஆல்பங்களிலும் இவர் முகம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை, காதல் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT