தென்னிந்திய ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம் 
சினிமா செய்திகள்

தென்னிந்திய ஓ.டி.டி. தயாரிப்பாளர்கள் சங்கம்- நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார். துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னட துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராக செயல்படுவார். தமிழக சங்கத்தின் கவுரவத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன் மற்றொரு கவுரவத் தலைவர் ஆவார்.

SCROLL FOR NEXT