ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகை மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில்,
ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகை மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இத்தகவல் ராதாவிற்கு தெரியவந்ததும் வங்கி கணக்குகளை சோதனை செய்து பார்த்த போது 5 செக்குகளில் ரூ.46 கோடி அளவில் செக் மோசடி நடந்துள்ளது முழுமையாக தெரியவந்துள்ளது.
செக் மோசடி தொடர்பாக நடிகை ராதா நேரடியாக சென்னை காவல் ஆணையத்தில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.