தீபாவளி பண்டிகையையொட்டி ‘மூக்குத்தி அம்மன்-2’ படம் திரைக்கு வருவதற்கு முன், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நயன்தாரா சென்னையின் காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்-2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. அவினி சினிமேக்ஸ், ரவுடி பிக்சர்ஸ் ஐ.வி. எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஊர்வசி, யோகிபாபு, ரெஜினா கசான்ட்ரா, இனியா, துனியா விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
‘மூக்குத்தி அம்மன்-2’ படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய உள்ளார். கோவிலில் நயன்தாரா சிறப்பு பூஜை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் முன்னோட்ட விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்று படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தனர். அப்போது பேசிய இயக்குநர் சுந்தர்.சி, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான தடைகள் நீங்க விரதம் இருந்து மாசாணி அம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டவர் நயன்தாரா. அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.