சினிமா செய்திகள்

நடிகை மிருணாளினி ரவிக்கு நிச்சயதார்த்தம்: நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கிறார்!

"7 வருட நட்பு தற்போது என் வாழ்க்கையின் காதலாக மாறியுள்ளது. சர்வதேச காதலிகள் தினத்தில் எனது வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறேன்"

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகையான மிருணாளினி ரவி, தனது நீண்ட நாள் காதலரான மஹாவிஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சிப் பதிவு:

தான் காதலிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட மிருணாளினி, "உன்னை நேசிப்பது என்பது இறுதியாக என்னையே நான் நேசித்துக்கொள்வது போல் உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், எந்த உலகத்திலும் நான் உன்னையே தேர்ந்தெடுப்பேன்" என்ற உணர்ச்சிப்பூர்வமான வரிகளுடன் நிச்சயதார்த்த மோதிரத்தின் குறியீட்டைப் பகிர்ந்துள்ளார்.

அதேவேளையில் காதலன் மஹாவிஷ்ணு தனது பதிவில், "7 வருட நட்பு தற்போது என் வாழ்க்கையின் காதலாக மாறியுள்ளது. சர்வதேச காதலிகள் தினத்தில் எனது வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழை:

முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென வெளியான இந்த நிச்சயதார்த்த செய்தியால் ரசிகர்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், யூடியூப் மற்றும் சோஷியல் மீடியா கிரியேட்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இத்தம்பதியினருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

காதலன் மஹாவிஷ்ணு யார்?

மிருணாளினியைக் கரம்பிடிக்கவிருக்கும் மஹாவிஷ்ணு, ஆன்மீகப் பேச்சாளராகவும் பயிற்றுநராகவும் விளங்குகிறார். இவர் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் மூலம் ஆன்மீக வகுப்புகளையும் சமூகச் சேவைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

மிருணாளினியின் திரைப்பயணம்:

டிக்டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மிருணாளினி. தெலுங்கில் வருண் தேஜுடன் 'கட்டாலக்கொண்ட கணேஷ்' படத்திலும், தமிழில் விஷாலுடன் 'எனிமி', விக்ரமுடன் 'கோப்ரா' மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் 'படைத்தலைவன்', விஜய் ஆண்டனியுடன் 'ரோமியோ'போன்ற பல முக்கியப் படங்களிலும் நடித்துப் பிரபலமானவர். விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.