சினிமா செய்திகள்

என் பெயரில் போலி முகநூல் கணக்கு- நடிகை லிஜோ மோல் எச்சரிக்கை

இது பற்றி உடனடியாக புகார் அளித்து கணக்கை நீக்க எனக்கு உதவுங்கள்

தமிழ், மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லிஜோ மோல். இவர் தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் பெயரில் ஒரு முகநூல் கணக்கு உள்ளது. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு முகநூல் கணக்கே கிடையாது.

என் பெயரில் உள்ள இந்த போலியான முகநூல் கணக்கை நம்பாதீர்கள். யாரும் அதனுடன் இணையாதீர்கள். இது பற்றி உடனடியாக புகார் அளித்து கணக்கை நீக்க எனக்கு உதவுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT