சினிமா செய்திகள்

மகள் திருமண புகைப்படத்திற்கு எதிர்ப்பு: நெட்டிசனை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு!

"உங்களுக்கு கடினமாக இருந்தால் என்னை பின் தொடர்வதை நிறுத்துங்கள்."

சுந்தர்.சி-குஷ்பு மகள் அவந்திகா திருமணம் கோவாவில் கடந்த 25-ந்தேதி நடந்தது. விழாவில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். கே.பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் பங்கேற்று கே.பாக்யராஜ் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்நிலையில் கே.பாக்யராஜ் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கே.பாக்யராஜ் காலை 7 மணிக்கு காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று காலை திருமண விழாவில் கணவர் சுந்தர்.சியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்களுக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘மாநிலமே கே.பாக்யராஜ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில் இந்த பதிவு உண்மையில் தேவையா?’ என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த குஷ்பு, அப்படி என்றால் ஏன் என்னை பின்தொடர்கிறீர்கள்? விமர்சிப்பதற்காக மட்டுமா? என் மகளுக்கு 46 மணி நேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. மேலும் பூர்ணிமாவை யாருக்கு நன்றாக தெரியும்? உங்களுக்கா? எனக்கா? உங்களுக்கு கடினமாக இருந்தால் என்னை பின் தொடர்வதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.