ஜோதிகா 
சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் காதல் இல்லை; காமம் தான் இருக்கிறது -நடிகை ஜோதிகா

திருமணத்திற்குப் பிறகு இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

நானும் சூர்யாவும் ரொமான்டிக்காக காதலை அழகாக சொல்லும் ஒரு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் சினிமாவின் 'எவர்கிரீன்' நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’ என இவர்கள் இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

ரொமான்டிக் கதை

நடிகை ஜோதிகா சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த், ஜோதிகாவிடம் ‘நீங்களும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து எப்போது நடிக்கப் போகிறீர்கள்?’ என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ஜோதிகா கூறுகையில், ‘நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பதற்கு நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை யாருமே அது போன்ற ஒரு கதையை சொல்லவில்லை. எனக்கு தெரிந்து சிலர்தான் அழகான ரொமான்டிக் கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற ரொமான்ஸ் படங்களை தமிழ் சினிமாவில் பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது வரும் படங்களில் காதல் இல்லை. காமம் தான் இருக்கிறது. எனவே நானும் சூர்யாவும் ரொமான்டிக்காக காதலை அழகாக சொல்லும் ஒரு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்தப் படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்