‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி. முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது நீண்டநாள் காதலரான, சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷா என்பவரை கரம்பிடித்துள்ளார் ஜனனி.
கடந்தாண்டு நிச்சயம் நடந்த நிலையில், இன்று குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஜனனி.