கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரசன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரமியா, அமீர், கிஷோர், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தான் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார் யோகலட்சுமி. ‘ஹார்ட் பீட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் யோக லட்சுமி. இதனை தொடர்ந்து தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதொடர்பாக யோகலட்சுமி கூறுகையில்,
நான் சிம்பு சாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவருடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். முதலில் அந்தப் புகைப்படத்தை என் அம்மாவிடம் காட்டினேன். அதைப் பார்த்ததும் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அந்தத் தருணத்தில் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை என்றார்.