சினிமா செய்திகள்

தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!

இந்த தொடர் முயற்சி இந்தியச் சினிமா உலகை மேலும் செழுமைப்படுத்துகிறது.

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

தேசிய விருது

அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

தொடர்ந்து தேசிய விருது வென்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவரகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்துக் வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது மூத்தக் கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சிறந்த படைப்புகளைத் தருவதற்கான உங்களின் இந்த தொடர் முயற்சி இந்தியச் சினிமா உலகை மேலும் செழுமைப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.