என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக டெல்லியில் மாணவரகள் போராடுவதை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். போராடும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சூர்யா, இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதின் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.
1997ல் நேருக்கு நேர் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், மாயாவி, கஜினி, சில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், ஏழாம் அறிவு, மாற்றான், சிங்கம் 2, அஞ்சான், மாஸ், 24, தானா சேர்ந்த கூட்டம், காப்பான், சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் (கௌரவ தோற்றம்), கங்குவா, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவரது ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.