சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சீன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி திரைக்கு வருகிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் அதிகாலை நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்ற சூர்யா கோவிலில் உள்ள சுப்பிரமணியர், சண்முகர் சன்னதிகளில் வழிபட்டார். சூர்யா கோவிலில் தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக திருச்செந்தூர் கோவிலில் பிரபலங்கள் வருகை அதிகரித்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.