சினிமா செய்திகள்

ரசிகரின் அம்மாவிடம் வீடியோ காலில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திக்கேயன் ரசிகர் அம்மாவுடன் வீடியோ கால் மூலம் பேசினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றம் கும்பகோணம் நகர தலைவர் இல்ல திருமண விழாவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வெளிநாட்டில் இருந்த சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களின் குடும்பத்தோடு வீடியோ கால் மூலம் பேசினார். மேலும் வீட்டில் இருந்த அவரின் ரசிகரின் அம்மாவிடம் நலம் விசாரித்து நீண்ட நேரமாக அவர் உரையாடினார்.

நடிகர் சிவகார்த்திகேயனிடம் ரசிகரின் அம்மா கூறுகையில், தங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுப்பதற்கு ஆர்வமாக இருந்தோம் என கூறினார்.

மேலும் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டது, மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றும் அந்த தாயார் கூறினார்.

இதற்கு சிவகார்த்திக்கேயன் பேசும்போது, தான் அந்த சமயத்தில் சென்னையில் இல்லாத காரணத்தால், உங்கள் அழைப்பிதளை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் தான் சென்னை வந்தபிறகு, தங்களை நேரில் சந்திப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். என்னுடைய ரசிகர்களாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், தனக்கு பெருமையாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் தான் எனக்கு ஆதரவாக இருப்பதாகவும் சிவகார்த்திக்கேயன் கூறினார்.

இதையடுத்து சிவாகார்த்திகேயனிடம் அவரின் ரசிகர் பேசுகையில், தங்களது ரசிகராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறினார்.