தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகராக இருந்து முதலமைச்சர் ஆனது முதலே திரைத்துறையை சேர்ந்த பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
எக்ஸ் தள பதிவு:
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன், "மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையில் அசாதாரணமானவை.
தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய தருணம்.
'ரசிகன் எக்ஸ்பிரஸ்' முதல் 'விஜய் விருதுகள்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல்... இப்போது உங்களுடன் இந்த தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும்.
அந்த சகோதரத்துவம், அந்த பிணைப்பு... அது தொடர்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.