சினிமா செய்திகள்

தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்

ரியோராஜின் ரிவர்ரூட் ஸ்டூடியோஸ் மற்றும் ரெட்ராக் ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

ஜோ, ஸ்வீட்ஹார்ட், லவ்மேரேஜ், ஆண்பாவம் பொல்லாதது உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரியோராஜ்.

அவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் ரியோராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகி பிரவுன் மணி என்ற படத்தை தயாரிக்கிறார். கதிரவன் சம்பத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பிரவுன் மணி. படத்தில் ராம்நிஷாந்த் கே.எஸ்.கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவ் பிரகாஷ் ரீகன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். லைவ் சவுண்ட் முறையில் படம் உருவாகி வருகிறது. ரியோராஜின் ரிவர்ரூட் ஸ்டூடியோஸ் மற்றும் ரெட்ராக் ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் ரியோராஜ் வெளியிட்டுள்ளார்.

குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், இரண்டு நண்பர்களின் உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் குடும்ப பொழுது போக்கு படமாகி உருவாகியுள்ளது. நகைச்சுவை, உணர்வு மற்றும் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் படம் உருவாகியுள்ளது. ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.