மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
விவாகரத்து வழக்கு தொடர்பாக பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்புக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் ரவி மோகன் செய்தியாளர்களுக்கு ஆதங்கத்துடன் பேட்டி அளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவிமோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த, பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தனது செயலுக்கு பொது மன்னிப்பு கோரியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிமோகன் மனுவாக தாக்கல் செய்துள்ளார்.