சினிமா செய்திகள்

நடிகர் பிரகாஷ் ராஜ் தாயார் சுவர்ணலதா மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா (86) நேற்று (மார்ச் 29) காலை பெங்களூருவில் காலமானார்.

நீண்ட காலமாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த சுவர்ணலதா, பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் சூழ அமைதியான முறையில் உயிர் நீத்தார்.

அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெங்களூருவில் உள்ள பிரகாஷ் ராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் திரு.பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

இந்தத் துயர்மிகு வேளையில் சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவரது கரம்பற்றிக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.