சினிமா செய்திகள்

மகன், மருமகனுடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகர் பிரபு

முதலமைச்சருடன் நடிகர் பிரபு எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ச ஜோசப் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகி இருக்கும் விஜய்க்கு தொடர்ந்து வாழ்த்து குவிந்து வருகிறது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மருமகன் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT