சினிமா செய்திகள்

ஹீரோயின் மாளவிகா மோகனன் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போல் இருந்தார் - சர்தார் 2 விழாவில் நடிகர் கார்த்தி

சர்தார் 2 திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா, சுந்தர் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நடிகர் கார்த்தி படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் பற்றி பேசினார்.

சிலர் மட்டுமே நினைப்பார்கள்:

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, ''தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா - தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள்.

இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.

மாளவிகா நம்ம ஊர் மோனிகா:

சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன், அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள்.

அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து, அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ‌இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, 'அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல' என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.

ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்," என்றார்.