தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அப்படக்குழு அறிவித்துள்ளது.
லார்ச் ஸ்டுடிஓஸ் தயாரிப்பில், கே.குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றுமாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தந்தை மற்றும் மகனின் எமோஷனல் பாசப் பிணைப்பை உணர்த்தும் வகையில், ஒரு முதியவர் இளைஞனின் கையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போன்ற போஸ்டர் டிசைன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திங்க் மியூசிக் நிறுவனம் இசையமைக்கிறது. 'மாமன்னன்', 'கருடன்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லார்ஜ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம் என்பதால், வணிக ரீதியாகவும் ‘தகப்பன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று மாலை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படத்தின் அடுத்தகட்ட கதைக் களம் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.