அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் தனுசுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் தனுஷ் தனது 2 மகன்களுடன் வந்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார். அப்போது, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தார்.
தொடர்ந்து எதாஸ்தானம் யாக பூஜையில் கலந்து கொண்ட அவர் அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன் நவகிரகத்தை தரிசனம் செய்தார்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடிகர் தனுசுக்கு மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் தனுசுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தனுஷ் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.