சினிமா செய்திகள்

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் அஞ்சலி

திரைத்துறையினர் பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த திரைக்கதை சக்ரவர்த்தி பாக்யராஜ் உடலுககு திரைப்பட நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனுவை தனுஷ் கட்டிப்பிடித்து ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

மேலும், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருடமும் தனுஷ் ஆறுதல் தெரிவித்தார்.

நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக கே.பாக்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.