உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.
பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் தனுஷ் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் தனுஷூம், பாரதிராஜாவும் திருச்சிற்றம்பலம் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.