சினிமா செய்திகள்

சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது..!- நடிகர் பகவதி பெருமாள்

சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள்.

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் நடிப்பில் கடந்த 21-ந் தேதி திரைக்கு வந்த படம் மொதராத்திரி.

படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படத்தின் நன்றி அறிவிப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் பகவதி பெருமாள் பேசியதாவது:-

சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இதுபோன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள் தான் முக்கிய காரணம்.

அந்த வகையில் மொதராத்திரி கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.

சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT