இதெல்லாம் புரோபைலா? நீயெல்லாம் ஒரு ஆக்டரா? உனக்கெல்லாம் இன்ஸ்டாகிராம் தேவையா? என சொல்லி என் பதிவுகளை டெலிட் செய்ய தொடங்கி விட்டார்.
அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அன்பில் அவன்’. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். காதலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் அசோக் செல்வன் - பிரீத்தி முகுந்தனின் கலகலப்பு உரையாடல் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
பிரீத்தி முகுந்தன் பேசும் போது, அசோக் செல்வன் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பார். ஆனால் படப்பிடிப்புக்கு ஒரு நாள் ‘செம’யாக வருவார். இன்னொரு நாள் ஏனோதானோ என்று வருவார். அப்போது குறுக்கிட்ட அசோக் செல்வன், இது குறித்து பிரீத்தி படப்பிடிப்பு தளத்திலேயே என்னிடம் சொல்வார். என் இன்ஸ்டாபுரோபைலை பார்த்து விட்டு பிரீத்தி ச்சீ... தூ... இதெல்லாம் புரோபைலா? நீயெல்லாம் ஒரு ஆக்டரா? உனக்கெல்லாம் இன்ஸ்டாகிராம் தேவையா? என சொல்லி என் பதிவுகளை டெலிட் செய்ய தொடங்கி விட்டார்.
நாங்கள் ரொம்ப ஜாலியான நண்பர்கள். பிரீத்தி எப்போதும் செல்போனில் தான் இருப்பார். அவரிடம் நான் ரொம்ப கற்றுக் கொள்ள வேண்டும். சாட் ஜி.பி.டி. கூடஅவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.
பிரீத்தி பேசும் போது, ஆக்டராக அசோக் ஜாலியாக இருப்பார். தயாரிப்பாளராக சீரியசாக இருப்பார். அவ்வப்போது அந்நியன் மாதிரி மாறிக் கொண்டே இருப்பார்.
இவ்வாறு இருவரது உரையாடலும் கலகலப்பாக அமைந்தது. படத்தை கருணாமூர்த்தி அசோக் செல்வன் மற்றும் அபினயா செல்வம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.