அரவிந்த் சாமி 
சினிமா செய்திகள்

வீட்டிற்கு காய்கறிகள்கூட நானே வாங்குகிறேன்: நேரமில்லை என சொல்பவர்களுக்கு அரவிந்த் சாமி பதில்

மேனேஜர், உதவியாளர், செயலாளர் என யாரும் எனக்கில்லை. எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன் என்றார்.

நேரமின்மை குறித்து புகார் கூறுபவர்களுக்கு நடிகர் அரவிந்த் சாமி பதிலளித்துள்ளார். அவர் தனது வேலைகளை தனியாகச் செய்து கொள்வதுடன், வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை கூட தனியாக வாங்குவதாக கூறியுள்ளார். நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்துகிறார்.

நடிகரும் தொழில் அதிபருமான அரவிந்த் சாமி எப்போதும் பிசியாக இருக்க கூடியவர். இந்நிலையில் தங்களுக்கு எதற்கும் நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு நடிகர் அரவிந்த் சாமி கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் அரவிந்த் சாமி கூறியிருப்பதாவது:-

வேலைகளை பட்டியலிட்டு தயாரிப்பது எனக்கு சலிப்பூட்டுகிறது. மேனேஜர், உதவியாளர், செயலாளர் என யாரும் எனக்கில்லை. எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன்.

வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை நானே வாங்குகிறேன். சில சமயங்களில் அதிகாலை 3 மணி வரை வேலை செய்வேன். மற்றபடி இரவு தூங்கி 3.30 மணி அல்லது 4 மணிக்குள் நானாகவே எழுந்து விடுவேன். குறைந்தபட்சம் 8, 9 மணி நேரம் தூங்குவேன். வீட்டில் பல விஷயங்களை மறந்து விடுவேன். எடுத்துக்காட்டாக என் மகள் அறைக்குள் வந்து என்னிடம் ஏதோ சொன்னார். நானும் பதில் சொன்னேன். 10 நிமிடங்களுக்கு பிறகு அவளிடம் எப்போது வந்தாய் என கேட்டேன். இது கடந்த வாரம் நடந்தது. சில நேரம் நான் ஏதேனும் ஒன்றில் மிகவும் மூழ்கி விட்டால் சில செய்திக்கு பதிலளிக்க கூட மறந்து விடுவேன். ஒரு வேளை எனக்கு வயதாகி விட்டதால் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT