சினிமா செய்திகள்

'தேரே இஸ்க் மேன்' வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய் உடன் கைகோர்க்கும் தனுஷ்

தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் அடுத்து உருவான தேரே இஸ்க் மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

மாலை மலர்

பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் அடுத்து உருவான "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹை பட்ஜெட் ஆக்சன் - ரொமான்ஸ் படமாக இப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.