சினிமா செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்பது போல் வீடியோ வைரல்

பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.

இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.