சினிமா செய்திகள்

டெல்லி பயணம்... விரைவில் கட்சி துவக்கம்? அக்.25 பெண் நிர்வாகிகளை சந்திக்கும் தனுஷ்?

நடிகர்களின் சமீபத்திய தீவிர ரசிகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளே இந்த யூகங்களுக்கு வழிவகுத்தன.

சென்னையில் வரும் அக்.25ம் தேதி, தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பின்போது இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்கமாக மாறிய மன்றம்

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சமீபத்தில் அமைப்புரீதியான மாற்றத்திற்காக, நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை வந்தது.

பெயர் மாற்றத்துடன், இயக்கத்திற்கான புதிய கொடி மற்றும் இலச்சினையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த பெண் நிர்வாகிகள் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விரைவில் அரசியல் இயக்கம் துவக்கம்?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர்களின் சமீபத்திய தீவிர ரசிகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளே இந்த யூகங்களுக்கு வழிவகுத்தன. மேலும் இச்சந்திப்புகளின் போதான நடிகர் தனுஷின் பேச்சுகளும் அவ்வாறே அமைந்தன.

இச்சூழலில் அமைப்புரீதியான மாற்றமும் இந்த யூகத்திற்கு மேலும் வலுசேர்த்தது. மேலும் நேற்று தனுஷ் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அக்.25ம் தேதி நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து விரைவில் நடிகர் தனுஷ் கட்சித் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT