இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
'பிரம்மயுகம்' திரைப்படத்தில் ஆற்றிய அசாத்தியமான மற்றும் மிரட்டலான நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.
'ஆர்ட்டிகள் 370' படத்திற்காக பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை யாமி கௌதம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெங்கி அட்லூரி- துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனத்திற்காக இவ்விருதை வென்றுள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படப் பிரிவில் (தெலுங்கு) பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஃபாசில் முகமதுவின் 'பெமினிச்சி பாத்திமா' என்ற படத்திற்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.