சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் 4 தமிழ் படங்கள்

வியாழன் முதல் ஞாயிறு வரை நீண்ட விடுமுறை நாட்களாக வருகிறது.ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வியாழக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழன் முதல் ஞாயிறு வரை நீண்ட விடுமுறை நாட்களாக வருவதால் பல திரைப்படங்கள் அன்று வெளியாக உள்ளது.

அவ்வகையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழில் 4 படங்கள் வெளியாகவுள்ளன.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

பிரசாந்த் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் அந்தகன் படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ள, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

பெரும் வெற்றியடைந்த அருள்நிதியின் டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

ஒரே நாளில் 4 முக்கிய தமிழ் படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.