சினிமா செய்திகள்

கங்குவா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி அனுமதி

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் கேரளா, கர்னாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை அதிகாலை 4 மணி காட்சிச்சு அனுமதி கேட்டுள்ளோம், அரசு ஒப்புதல் கொடுத்தால் இங்கும் அதிகாலை காட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

SCROLL FOR NEXT