சினிமா செய்திகள்

4 நாட்களில் ரூ.28.3 கோடி.. வசூலில் அசத்தும் கென் கருணாஸின் 'யூத்' | Youth

பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியானது முதல் வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை மலர்

அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ்.

நடிப்பை கடந்து கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார்.

தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியானது முதல் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 4 நாட்களில் ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.28.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.