சினிமா செய்திகள்

உலகளவில் 240 கோடி வசூலித்த வேட்டையன் - வெற்றியை கொண்டாடிய படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் தற்போதுவரை உலகளவில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வெற்றியை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது.

இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.