சினிமா

சினிமா ஆசையால் டிவியை கைவிட்ட தொகுப்பாளினி!

தனியார் தொலைக்காட்சி மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யமான தொகுப்பாளினி, பெல் இயக்குனர் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாராம்.

மாலை மலர்

தனியார் தொலைக்காட்சி மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யமான தொகுப்பாளினி, பெல் இயக்குனர் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாராம். இதன் காரணமாக சினிமாவில் வலம் வந்துவிடலாம் என்ற பேராசையில் தொலைக்காட்சியில் இருந்து வெகுநாட்களாக விலகி இருந்தாராம். ஆனால், அவரது இந்த பேராசையால், எந்த சினிமா வாய்ப்புகளும் வரவில்லையாம்.

தொகுப்பாளினியாக பிரபலமடைந்த இவரை யாரும் நடிப்பதற்கு அழைக்கவில்லையாம். இதனால், மிகவும் கஷ்டப்பட்டுள்ளாராம். மேலும், பண நெருக்கடியால் சிக்கி இருக்கிறாராம். இதனால், திரைப்பட விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.