சிரஞ்சீவி, அஜித் 
சினிமா

அஜித் நழுவவிட்ட தலைப்பை கைப்பற்றிய சிரஞ்சீவி

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். 

தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காட்ஃபாதர் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘காட்ஃபாதர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

முன்னதாக தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்திற்கு முதலில் ‘காட்ஃபாதர்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அதனை வரலாறு என மாற்றினர். அஜித் நழுவவிட்ட தலைப்பை தற்போது சிரஞ்சீவி கைப்பற்றி உள்ளார்.