சினிமா

செக்கச் சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள நான்கு நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகிய நிலையில், அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam

மாலை மலர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், படத்தின் போஸ்டர் நாளை காலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV