சினிமா

செக்கச் சிவந்த வானம் படத்தின் சென்சார் ரிசல்ட்

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #CCV

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காண்பித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam

SCROLL FOR NEXT