இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர். இதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் விஜய் ஸ்ரீ ஜி.
உள்ளூரில் தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகர், நடிகையினர் அனைவரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.